துபாய்:
இந்திய நடிகை ஸ்ரீதேவி நேற்று முன் தினம் துபாயில் இறந்தார். அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் கழிப்பிடத்தில் விழுந்து இறந்ததாக கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை மற்றும் விசாரணையில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக அவரது உடலை இந்தியா கொண்டு வருவதில் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில் சட்ட நடைமுறைகள் அனைத்தும் இன்று முடிந்தது. எம்பாமிங் முடிந்தவுடன் அவரது உடல் துபாய் விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது என்று கல்ஃப் நியூஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel