சென்னை:

ரசியலில் ஆர்வம்காட்டாத ஸ்ரீதேவி, தனது தந்தைக்காக 1989ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

ஸ்ரீதேவிக்குத்தான் அரசியலில் நாட்டம் இல்லையே தவிர, அவரது குடும்பம் அரசியல் பின்புலம் கொண்டது.  அவரது குடும்பத்தினர் தீவிர காங்கிரஸ் அபிமானிகள்.

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் தந்தையான அய்யப்பன் 1989ம் ஆண்டு நடைபெற்ற தமிழக ட்டசபை தேர்தலில் சிவகாசி தொகுதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.

குழந்தை ஸ்ரீதேவி.. அப்பாவுடன்

அப்போது ஸ்ரீதேவி தனது தந்தையுடன் சுமார் ஒரு வார காலம் சிவகாசி தொகுதியில் தந்தைக்காக வாக்கு சேகரித்தார்.

ஆனால் அந்த தேர்தலில் ஸ்ரீதேவியின் தந்தை அய்யப்பன் தோல்வியடைந்தார்.

ஆனாலும் ஸ்ரீதேவியின்  பெரியப்பா ராமசாமி 1977ல் ஜனதா கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக பத்து வருடங்களும்,  அனுப்பன்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக இருபது வருடங்களும் பொறுப்பு வகித்தார்.

ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதாவின் திருமணத்தின் போது கருணாநிதியுடன்..

ஸ்ரீதேவியின் தந்தை ஐயப்பன் 1990ல் மாரடைப்பாலும் தாய் ராஜேஸ்வரி, 1996ம் ஆண்டு  நோயாலும் மரணமடைந்தனர்.

அதன் பிறகே ஸ்ரீதேவி, போனிகபூரை திருமணம் செய்துகொண்டார்.

அதன் பிறகு சொந்த ஊருக்கு (சிவகாசிக்கு) அவர் வரவே இல்லை.