ஸ்ரீதேவி கணவரிடம் விசாரணையா?: துபாய் காவல்துறை விளக்கம்

Must read

துபாய்:

டிகை ஸ்ரீதேவி மர்ம மரணம் குறித்து அவரது கணவர் போனி கபூரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக வெளியான தகவலை துபாய் காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

கடந்த, ஐம்பது வருடங்களாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்த பிரபல நடிகை, ஸ்ரீதேவி, (வயது 54)  வளைகுடா நாடான ஐக்கிய அரசு எமிரேட்ஸின் துபாய் நகருக்கு உறவினர் திருமணத்துக்கு சென்றார் அங்கு விடுதியில் தங்கியிருந்தபோது  மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து உடல், நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன. முன்னதாக அவர் மாரடைப்பால் இறந்ததாக தகவல் வெளியானது.

ஆனால்,’அவர் மாரடைப்பால் இறக்கவில்லை; குளியல் தொட்டியில் மூழ்கி இறந்துள்ளார். இறக்கும்போது மதுபோதையில் இருந்துள்ளார்’ என, பிரேத பரிசோதனையில், தெரியவந்தது.

இந்த நிலையில், ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக, அவரது கணவர் போனி கபூரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து துபால் காவல்துறையினர் விசாரணை நடத்தியதாகவும், வாக்குமூலத்தை பதிவு செய்த பிறகே, அவரை, விடுதிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள்  வெளியாகின.

ஆனால், துபாய் காவல்துறையினர் இதனை மறுத்துள்ளனர். போனி கபூரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக வெளியான தகவல் ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article