ஸ்ரீ வைத்தியநாத சாய்பாபா கோயில், சென்னை, ராமாபுரத்தில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் வேண்டுதல் மிகச் சிறப்பாகும். சீரடி சாய் பாபா பக்தர்கள் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற பாபாவை வேண்டிக் கொண்டு ஒன்பது வியாழக்கிழமை சாயி விரதம் இருப்பார்கள். அப்படி இருந்தால் தாங்கள் வேண்டியது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

சாய்பாபாவுக்கான விரதத்தை யார் வேண்டுமானாலும், எந்த வியாழக்கிழமை வேண்டுமானாலும் தொடங்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.

எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிரார்தித்துக் கொள்ள வேண்டும். காலை அல்லது மாலை சாயி பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும்.

இந்த விரதத்தை திரவ ஆகாரங்கள் உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்யமுடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை உணவு அருந்தலாம். நாள் முழுவதும் பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது.

ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சல் துணியை விரித்து சாயி பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்.

விரதத்தின் ஒன்பது வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை எனில், அந்த வியாழக்கிழமை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொருவியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும்.

ஒன்பதாவது வியாழக் கிழமை ஐந்து ஏழைகளுக்கு உணவு அளிக்கவும். நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ,உணவுப் பொருளோ கொடுத்து ஏற்பாடு செய்யவும். இப்படி சாய்பாபா விரதங்களுக்கும் விதிமுறைகள் இருக்கின்றன.