
கொழும்பு:
இலங்கையில் பேஸ்புக் மீது விதிக்கப்பட்ட தடை மட்டும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.
இலங்கையில் கண்டி பகுதியில் கடந்த வாரம் இஸ்லாமியர்களுக்கும், புத்தமத்தினருக்கும் இடையே மோதல் உருவானது. அதைத்தொடர்ந்து நடபெற்ற வன்முறைச் சம்பவத்தின்போது ஒருவர் தீயிட்டு கொழுத்தப்பட்டார். 10க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள், ஏராளமான கடைகள், வாகனங்கள் தீவைத்தும், அடித்தும் சேதப்படுத்தப்பட்டன.
இநத் வன்முறை இலங்கை முழுவதும் சமூக வலைதளங்கள் மூலம் பரவ தொடங்கியது. இதையடுத்து, இலங்கை முழுவதும் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனத்தை இலங்கை அரசு பிறப்பித்தது.
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு புத்தமதத்தை சேர்ந்தவர்கள் பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யுடியூப் போன்ற சமூக வலை தளங்களில் அழைப்பு விடுத்துள்ள நிலையில், சமூக சேவை நெட்வொர்க்குகளை தற்காலைகமாக தடை செய்து அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், பேஸ்புக் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கலவரத்தின் போது வன்முறை மேலும் பரவாமல் இருக்க சமூக ஊடகங்கள் பயன்படுத்த நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டது. அதில் பேஸ்புக் மீதான தடை மட்டும் நீக்கப்படு கிறது. பேஸ்புக் மூலம் வன்முறையை ஏற்படுத்தும் வகையான பேச்சுகள் பரவாது என அந்நிறுவனம் உறுதியளித்த பின்னர் . இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்
[youtube-feed feed=1]