இந்தி மற்றும் சீன மொழி கற்க வேண்டியது அவசியம் என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெற்ற பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாறிவரும் உலக சூழலுக்கு ஏற்ப மாணவர்கள் தங்கள் கல்வியை வளர்த்துக் கொள்வது அவசியம் என்றும் இந்தி மற்றும் சீன மொழியை கட்டாயம் பயில வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கை பள்ளிகளில் இரண்டாவது மொழியாக ஆங்கிலம் கற்பிக்கப்பட்டு வரும் நிலையில் பல்கலைக்கழங்கங்களில் புதிய பாடத்திட்டங்களில் சேர தேவையான தகுதி தேர்வை எழுத மாணவர்கள் இந்தி மற்றும் சீன மொழியை கற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கேவின் இந்த பேச்சு இலங்கை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.