நாகை,
தமிழக மீனவர்கள்மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை யினர், நேற்று மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்மீதும் தாக்குதல் நடத்தி விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
இது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் 2வது நாளாக தாக்குதல் நடத்தினர்.
அவர்களிடம் இருந்த ஜிபிஎஸ் கருவிகளை பறித்துக்கொண்டும், வலைகளை நாசம் செய்தும் விரடியடித்துள்ளனர்.
சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடற்படையினர்போல வேடமிட்டு மர்ம நபர்களும் தமிழக மீனவர்களை தாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோடியக்கரைக்கு தென்கிழக்கே இரவு 8 மணிக்கு கடல் பரப்பில் வலை விரித்து மீன்பிடித்தனராம். அப்போது ஒரு விரைவு படகில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் வைத்திருந்த கயிறு, சமிக்ஞை விளக்கு, நண்டு, மீன் ஆகியவற்றை அபகரித்துக்கொண்டு, மீனவர்களைத் தாக்கி விரட்டிவிட்டதாக மீனவர்கள் கூறி உள்ளனர்.
ஏற்கனவே கடந்த புதன்கிழமை இரவும் , மர்ம நபர்களால் வலைகள் அபகரிக்கப்பட்டு தமிழக மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவும் காரைக்கால், நாகை மீனவர்கள் மூவர் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டிருப்பது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கே விடிவே கிடையாது என்று மீனவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.