கொழும்பு:

லங்கையில் அதிபர் தேர்தல், வரும் 16-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று நள்ளிரவுடன் அங்கு தேர்தல் பிரசாரம் முடிவுடைகிறது. இதை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இறுதிக்கட்ட அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அங்கு  ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் சஜித் பிரேமதாசா களமிறங்கி உள்ளார்.

அதுபோல,  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் சார்பாகமுன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே களமிறக்கப்பட்டு உள்ளார்.  அத்துடன்  மேலும் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு, ஆர். சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து உள்ளது. இந்த கூட்டமைப்பில்  இலங்கை தமிழரசு கட்சி, டெலோ, ப்ளாட் ஆகிய இயக்கங்கள் அங்கம் வகித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று இறுதிநாள் பிரசாரம் இன்றுடன் முடிவுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளார். மேலும், தேர்தல் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள  பிரசார அலுவலகங்களும் அகற்றப்பட வேண்டும் என்றும்  தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்னாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.