வாஷிங்டன்

தரீதியாக அதிகமாக பாதிப்பு அடைபவர்களில் சீக்கியர்கள் மூன்றாம் இடத்தில் உள்ளதாக அமெரிக்க புலனாய்வுத் துறையான எஃப் பி ஐ தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் மத மற்றும் இன ரீதியாக நடத்தப்படும் குற்றங்கள் அதிக அளவில் உள்ளன.   இதை வெறுப்புக் குற்றங்கள் என அழைக்கின்றனர்.  பல நாட்டவர் மற்றும் பல்வேறு மதத்தை சேர்ந்த்வர்கள்  வசிக்கும் அமெரிக்காவில் ஒரு வருடத்துக்கு சுமார் இரண்டரை லட்சம் வெறுப்புக் குற்றங்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.  இது குறித்து அமெரிக்க புலனாய்வுத்துறை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த தகவலில், “அமெரிக்காவில் வருடத்துக்கு சுமார் 2.5 லட்சம் வெறுப்புக் குற்றங்கள் நடக்கின்றன.  சென்ற வருடம் இவற்றில் 7120 குற்றங்கள் மட்டுமே பதியப்பட்டுள்ளன.  இதில்  4047 குற்றங்கள் நிறப் பாகுபாடு காரணமாக நடந்துள்ளன. கறுப்பின மக்களுக்கு எதிராக 1943 குற்றங்களும், வெள்ளையர்களுக்கு எதிராக 762 குற்றங்களும் லத்தீன் மொழியினருக்கு எதிராக 485 குற்றங்களும் நடந்துள்ளன.

மதரீதியாக நடந்த தாக்குதல் சம்பவங்களாகப் பதிவானவை 835 ஆகும்.   இவற்றில் யூதர்களுக்கு எதிரான தாக்குதல் 835,  இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல் 188 மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல் 60 எனப் பதிவாகி உள்ளன.   ஒரே வருடத்தில் சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் 200% அதிகரித்துள்ளன.    இதன் மூலம் அதிகம் வெறுக்கப்படும் மதங்களில் சீக்கிய மதம் மூன்றாவதாக உள்ளது தெரிய வந்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.