பிரேசிலியா, பிரேசில்

ன்று தொடங்க உள்ள பிரிக்கா மாநாட்டில் கலந்துக் கொள்ள பிரதமர் மோடி பிரேசிலுக்குச் சென்றுள்ளார்.

பிரிக்ஸ் அமைப்பு பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியது ஆகும்.   பிரேசில் தலைநகரான பிரேசிலியாவில் இன்று இந்த அமைப்பின் 11 ஆம் உச்சி மாநாடு தொடங்குகிறது.   இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ள நேற்று பிரதமர் மோடி இந்தியாவில் இருந்து புறப்பட்டு சென்றார்.    இம்மாநாட்டில் டிஜிடல் பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

நேற்று தமது பிரேசில் பானம் குறித்து மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோவுடன் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றிப் பேசுவேன். பிரிக்கா நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், புதுமையான எதிர்காலத்துக்கான பொருளாதார வளர்ச்சி என்ற உச்சி மாநாட்டின் கருப்பொருளுடன் பிற பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதை எதிர்நோக்குகிறேன்

பிரிக்ஸ் நாடுகளுடனான உறவில் நமது வர்த்தகம், தொழில் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. நான் பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில் உரை ஆற்றுகிறேன். பிரிக்ஸ் வர்த்தக குழு மற்றும் நியூ டெவலப்மென்ட் வங்கியில் கலந்துரையாடுகிறேன்  பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்துவதற்கு இந்த மாநாடு, வழிவகுத்துத் தந்துள்ளது” என மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரை சந்தித்து மோடி இரு தரப்பு பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

இந்நிலையில் பிரேசில் நாட்டு இந்தியத் தூதர் ஆண்ட்ரே லாகோ, “பிரேசில் நாடு காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறது.   அது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்  என பிரேசில் கருதுகிறது.   எனவே இந்த மாநாட்டில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட மாட்டாது எனக் கருதுகிறேன்.” எனத தெரிவித்துள்ளார்.