sri lanka map

வீட்டு வேலை செய்பவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை இலங்கை நிறுத்தப் போகிறது உரிமை மீறல்கள், சமூக செலவுகள் மற்றும் உள்ளூரில் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக இலங்கை படிப்படியாக வீட்டு வேலை செய்பவர்களை வெளிநாடுகளுக்கு முக்கியமாக மத்திய கிழக்கிற்கு அனுப்புவதை நிறுத்தப் போகிறது என்று புதன்கிழமையன்று அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ரஜிதா சேனாரத்னா தெரிவித்துள்ளார். இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், முக்கியமாக வீட்டு வேலைக்காரிகள் மற்றும் பயிற்றப்படாத ஊழியர்கள், அவர்களின் பணத்தை திரும்ப அனுப்புகிறார்கள் – இது தான் தீவு நாட்டின் முக்கிய அந்நியச் செலவாணி வருமானத்தை ஈட்டித்தருகிறது – $ 82.2 பில்லியன் பொருளாதாரத்திற்கு $ 7 பில்லியனை ஒரு ஆண்டிற்கு சம்பாதிக்க உதவுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, வேலையாரட்களின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைக்க உத்திகளை யோசித்து ஆராய்ந்து இறுதியாக வெளிநாடுகளுக்கு வேலைக்காரிகள் அனுப்புவதை நிறுத்த ஒரு குழுவை நியமித்ததுள்ளதாகச் சேனாரத்னா கூறினார். “சமூக செலவு மிக அதிகமாக உள்ளதால் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் வீட்டு வேலைக்காரிகள் வகையராவை நாங்கள் ஊக்குவிக்க வேண்டாம் என்று எண்ணுகிறோம்,” என்று அவர் கூறினார்.

மனித உரிமைகள் மீறல் மற்றும் கற்பழிப்புகள் காரணமாகச் சமூக செலவுகள், போதை மருந்துப் பழக்கம் மற்றும் பல வீட்டு வேலைக்காரிகளின் குடும்பங்களில் சிறுவர்களின் துஷ்பிரயோகம், மற்றும் உள்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை, ஆகிய காரணங்கள் தான் அரசாங்கத்தை இப்படியொரு முடிவை எடுக்க வைத்தது என்று அவர் கூறினார். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக மொத்தமாக வெளியேறும் எண்ணிக்கை, மத்திய கிழக்கில் பொருளாதார நடவடிக்கைகள் குறைந்ததினால் கூட, கடந்த ஆண்டு 12.4 சதவீதம் குறைந்து 263,307 ஆக ஆனது. இலங்கை ஏற்கனவே குறைந்த திறமையான பெண்கள் மற்றும் வீட்டு வேலைக்காரிகளுக்கு பதிலாகத் திறமையான ஆண் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை ஊக்குவித்து வருகிறது. 2013 ஆம் ஆண்டில், வெளிநாட்டில் முக்கியமாக மத்திய கிழக்கில் வேலை செய்யும் கிட்டதட்ட 1,650 இலங்கை வீட்டு வேலைக்காரிகள் உடல் ரீதியாகவும் பாலியல் ரீயதாகவும் தங்கள் முதலாளிகள் தங்களிடம் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்று புகார் அளித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திலிருந்து சமீபத்திய தரவு காட்டியது.

2013 ஆம் ஆண்டில், ஒரு இளம் இலங்கை பணிப்பெண்ணின் மரண தண்டனைக்கு எதிராக இலங்கையின் தொடர்ச்சியான முறையீடுகளை நிராகரித்து, அவரது பராமரிப்பில் இருந்த குழந்தை இறந்ததற்காக அவரது தலையைச் சவுதியர்கள் வெட்டினர். 2010 ஆம் ஆண்டு, அதிகமாக வேலை இருப்பதாக அவர்களது இலங்கை பணிப்பெண் புகார் அளித்தபிறகு, ஒரு சவுதி தம்பதியர் அந்தப் பணிப்பெண்ணின் கைகள், கால்கள் மற்றும் நெற்றியில் 24 ஆணிகளைச் சம்மட்டியால் அடித்துச் சித்திரவதை செய்தனர். அந்தப் பணிப்பெண் வீடு திரும்பினார். கடந்த ஆண்டு, விபச்சாரத்திற்காக ஒரு இலங்கை பணிப்பெண்ணின் மரண தண்டனையை முறையீட்டுக்குப் பிறகு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையாகச் சவுதி அதிகாரிகள் குறைத்தனர்.