கொழும்பு: 
லங்கையில், அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே உணவு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
தற்போது, இலங்கையின் மொத்த அந்நிய செலவாணி 2.5 பில்லியன் டாலராக மட்டுமே இருக்கிறது. இதையடுத்து, இதை அடுத்து, அரிசி, சர்க்கரை, போன்ற உணவுப்பொருட்களுக்கான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அங்கு உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.