கொழும்பு: இலங்கை முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சே மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக  வெளிநாடு செல்வதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையில் ராஜபக்சே குடும்ப ஆட்சியால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், அங்கு மக்கள் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே மற்றும் அமைச்சர் பொறுப்பில் இருந்து பசில் ராஜபக்சே உள்பட மகிந்த தலைமையிலான அரசும் கவிழ்ந்தது. தொடர்ந்து அதிபராக இருந்து கோத்தபய ராஜபக்சேவும், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு தப்பி ஓடினார். தற்போது தாய்லாந்தில் தங்கி உள்ளது.

இந்த நிலையில்,  இலங்கையை சேர்ந்த சிலோன் வர்த்தக கூட்டமைப்பு முன்னாள் தலைவர் சந்திர ஜெயரத்னே உள்ளிட்ட சிலர் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சே, மத்திய வங்கி முன்னாள் கவர்னர் அஜித் நிவர்டு கப்ரால் ஆகியோர்தான் காரணம் என்றும், அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி இருந்தனர்.

இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி வரும் இலங்கை உச்சநீதிமன்றம், மேலே குறிப்பிட்ட நபர்கள் வெளிநாடு செல்ல தடை விதித்தது. இந்த நிலையில், அவர் ஜனவரி 15, 2023 வரை மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளலாம் என அந்நாட்டு நிதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.