கொழும்பு:

லங்கையில் நடைபெற்று  மத வன்முறை மற்ற பகுதிகளுக்கும் பரவாதவகையில் சமூக வலைதளங்களை அந்தநாட்டு அரசு முடக்கி உள்ளது.

இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRC), சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், வைபர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சேவைகைளை 3 நாட்களுக்கு முடக்கப்படுவதாக அறிவித்து உள்ளது.

இனவாத வன்முறை பரவலைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுப்பதாக டிராய் தெரிவித்துள்ளது.

இலங்கையில்   கண்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்லாமியர்களுக்கும், புத்தமத்தினருக்கும்  இடையே மோதல் உருவானது. அதைத்தொடர்ந்து நடபெற்ற வன்முறைச் சம்பவத்தின்போது ஒருவர் தீயிட்டு கொழுத்தப்பட்டார்.

இதைத்தொடர்ந்து வன்முறை பல இடங்களுக்கு பரவியது.  இந்த வன்முறை காரணமாக 10க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள், ஏராளமான கடைகள், வாகனங்கள்  தீவைத்தும், அடித்தும் சேதப்படுத்தப்பட்டன. மேலும் பல இடங்களிலும் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது.

இந்த மதக்கலவரம்  நாடு முழுவதும் பரவ தொடங்கியது. இந்த கலவரத்தை முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் ஆதரவாளர்கள் திட்டமிட்டு பரப்புவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கண்டி தெல்தெனிய மற்றும் பல்லேகல பகுதிகளில்  ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது. மேலும் வன்முறை  ரவாமல் தடுக்கும் வகையில் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனத்தை இலங்கை அரசு நேற்று பிறப்பித்தது.

இந்நிலையில், கலவரம் குறித்த தகவல்கள் மொபைல் போன், வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்கள் மூலம் பரவுவதால், அதை தடுக்கும் பொருட்டு கண்டியில் செல்போன்கள் சேவையை  முடக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அவசர சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையிலும் பல இடங்களில் கலவரம் நடைபெற்று வருகிறது.

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு புத்தமதத்தை சேர்ந்தவர்கள் பேஸ்புக்  போன்ற சமூக வலை தளங்களில்  அழைப்பு விடுத்துள்ள நிலையில், சமூக சேவை நெட்வொர்க்குகளை தடை அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அனைத்து சமூக வலைதளங்களும் 72 மணி நேரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.