ஸ்ரீதேவியின் 300-வது திரைப்படம் ‘மாம்’ . ரவி உதயவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் ஸ்ரீதேவிக்கு கிடைத்தது.

இந்த படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்தது.

இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, சிங்கப்பூர் , இங்கிலாந்து, போலந்து, ரஷ்யா,செக் குடியரசு, அரபு நாடுகள் உள்ளிட்ட 39 நாடுகளில் இந்த படம் வெளியிடப்பட்டது . இந்த நிலையில், தற்போது சீனாவிலும் வெளியாக இருக்கிறது. மே 10ம் தேதி அன்னையர் தினத்தை முன்னிட்டு ‘மாம்’ படம் ‘ திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.