டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மணிசங்கர் அய்யருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் விரைவில் குணமடைந்து ஆரோக்கியம் பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத் டிவிட் பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் தொற்று பரவல் கட்டுக்குள் வருவதாக அறிவித்து வந்தாலும், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், களப்பணியாற்றிய சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சியினர் என பலதரப்பினரும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தைச்சேர்ந்த மூத்தகாங்கிரஸ் உறுப்பினர் மணிசங்கர் அய்யருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  இந்த தகவலை காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய்தத் உறுதிப்படுத்தி உள்ளார்.
அவர் விரைவில் குணமடைய வேண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினருடன் தானும் இணைந்து பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.