புதுக்கோட்டை: தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி தனது பீகார் மாநில தேர்தல் அறிக்கையில், மாநிலத்தில் பாஜக கூட்டணி வெற்றிபெற்றால், மாநில மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என இன்று காலை அறிவித்தது.  இந்த நிலையில், தமிழக முதல்வர், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும், தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என அச்சதலாக அறிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தினசரி 5ஆயிரத்துக்கும் குறைவான அளவே தொற்று பாதிப்பு தெரிய வந்துள்ளது. அதே வேளையில், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைவது வெகுவாக அதிகரித்துள்ளது. மேலும் உயரிழப்பும் 1 சதவிகதம் அளவிலேயே உள்ளது.
இந்த நிலையில், புதுக்கோட்டை ஆய்வுகளை முடித்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு வந்தவுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும்  என்று  தெரிவித்தார். மேலும்,  2020-21 ஆம் நிதியாண்டில் சுமார் 500 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பீகாரில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், முதல்வரின் அதிரடி அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.