தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் பெற்று பரவ ஆரம்பித்திருக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் ஒமிக்ரான் மிகவும் ஆபத்தானது.

இது வேகமாக பரவக்கூடியது மட்டுமன்றி முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் தாக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசி மூலம் இதனை கட்டுப்படுத்த முடியும் என்று ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் தெரிவித்துள்ளது.

ஸ்புட்னிக் தடுப்பூசி மருந்துகளில் எந்தவகையான உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசையும் சமாளிக்கும் வகையில் தேவையான மாற்றங்களை செய்யமுடியும் என்று கூறியுள்ளனர்.

மேலும், கொரோனா வைரசுக்கான வெவ்வேறு தடுப்பூசிகளை கலந்து பயன்பதுத்துவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.