சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுஇடங்களில் எச்சில் துப்ப தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் அமைந்துள்ள தலைமைச் செயலக வளாகத்தில்  எச்சில் துப்பினால் ரூ.500, மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் என  தமிழகஅரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.\

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது.  நேற்று ஒரே நாளில் புதிதாக  11,681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் நேற்று 3,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகளுடன் கட்டுப்பபாடுகளை அறிவித்தாலும், அதை முறையாக கடைபிடிக்காமல் மெத்தனம் காட்டுவதால் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இதையடுத்து, மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும், பொது இடங்களில் எச்சின் துப்பினால், சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டாலும் அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள சென்னை தலைமை செயலக வளாகத்தில், கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  இதுகுறித்து பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி முககவசம் அணியாமல் இருப்பது, பொது இடங்களில் எச்சில் துப்புவது ஆகியவை தவறான பழக்கவழக்கமாகும். இது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். பொது இடங்களில் அபராதம் விதிக்கப்படுவது போல் இனி தலைமை செயலகத்திலும் அபராதம் விதிக்கப்படும். அதன்படி

தலைமை செயலக வளாகத்தில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் 

சமூக இடைவெளியை பின்பற்றாமல் சென்றால் ரூ.500 அபராதம் 

முககவசம் அணியாமல் சென்றால் ரூ.200 அபராதமும்  வசூலிக்கப்படும் எ ன தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,  அரசு ஊழியர்கள்  இந்த உத்தரவை கடுமையாக பின்பற்ற வேண்டும்  என்றும், இதை கடுமையாக செயல்படுத்தும் வகையில்,  தலைமை செயலக பாதுகாப்பு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]