வாஷிங்டன்

பிரிட்டன் இளவரசர் சார்லஸை எழுத்துப் பிழையால் திமிங்கலங்களின் இளவரசர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதியும் டிவிட்டர் பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.  அவருக்கு 6.1 கோடிரசிகர்கள் டிவிட்டரில் உள்ளனர்.   பல சமயம் டிரம்பின் பதிவுகளில் எழுத்துப் பிழைகள் உள்ளதால் சர்ச்சையை ஏற்படுத்துவதும் தொடர்ந்து வருகிறது.

வேல்ஸ் இளவரசர் (PRINCE OF WALES) என பிரிட்டன் இளவரசர் சார்லஸ் அழைக்கப்படுவது வழக்கமாகும்.   அவரை சமீபத்தில் லண்டனில் சந்தித்த டிரம்ப் அது குறித்து PRINCE OF WHALES என குறிப்பிட்டுள்ளார்.  இதற்கு திமிங்கலங்களின் இளவரசர் என பொருள் ஆகும்.

இந்த டிவிட் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் அவர் தனது பதிவை திருத்தி உள்ளார்.   ஆனால் மற்றொரு பதிவில் அரசி எலிசபெத்தை இங்கிலாந்து அரசி என குறிப்பிட்டதை இன்னும் மாற்றாமல் உள்ளார்.

பிரிட்டன் நாட்டில் பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகியவை உள்ளிடங்கியவை ஆகும்.  அதில் இங்கிலாந்து ஒரு பகுதி ஆகும். எலிசபெத் முழு பிரிட்டனுக்கும் அரசி என்பது குறிப்பிடத்தக்கது.