சென்னை: வெளி மாநில கட்டுமான தொழிலாளர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்குதல் மற்றும் கட்டிட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியினை  தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின்  இன்று தொடங்கி வைத்தார்.

 

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையில் தடுப்பூசி போடும் பணிகளும், கொரோனா சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் தங்கி வேலைசெய்துவரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திடுப்பூசி சிறப்பு முகாம் இன்று தொடங்கப்பட்டு உள்ளது.

சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கலை கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுங்ளள தடுப்பூசி சிறப்பு முகாமை தொடங்கி வைத்த முதல்வர், அங்கு  நடைபெற்ற நிகழ்வில் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

இதன்படி, கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 13,41,494 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக 2 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கப்பட்டு உள்ளது.