சென்னை

கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது

ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,

”திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க ரெயில் எண் 06115/06116 தாம்பரம் – திருவண்ணாமலை – தாம்பரம் முன்பதிவு செய்யப்படாத மெமு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

ரயில் எண். 06115:

தாம்பரம் திருவண்ணாமலை முன்பதிவு செய்யப்படாத மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து 13, 14, 15 டிசம்பர், 2024 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில் இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு, 14.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும

ரயில் எண். 06116:

திருவண்ணாமலை தாம்பரம் முன்பதிவு செய்யப்படாத மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் திருவண்ணாமலையில் இருந்து 13, 14, 15 டிசம்பர், 2024 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில் 22.25 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மதியம் 02.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.”

என அறிவிக்கப்பட்டுள்ளது.