சென்னை:

மிழக அரசு  சார்பில் மகளிருக்கான இலவச திறனாய்வு பயிற்சி ஆண்டுதோறும்  அளிக்கப்படுகிறது. உதவி தொகையுடன் வழங்கப்படும்  இந்த இலவச பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

10வது மற்றும் 12வது படித்துள்ள மாணவ மாணவிகளும்  இந்த சலுகையுடன் படிக்கும் வசதியை பெறலாம். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள், கிண்டியில் உள்ள மகளிருக்கான அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வேலைவாய்ப்புக்கான முயற்சியை மேற்கொள்ளலாம்.

இந்த  இலவச பயிற்சியில் சேர 27.06.2018 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள இணையதளத்தை கிளிக் செய்து பார்த்தால், பயிற்சி குறித்த அறிவிப்புகள், பயிற்சியின் காலம் போன்ற விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.

http://skilltraining.tn.gov.in/itia2018/CaptchaAction.htm?method=captcha1

மேலும் இந்த சிறப்பு பயிற்சியில் சேர்ந்த படிக்கும் அனைத்து மகளிருக்கும், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள், இலவச பேருந்து பயணச்சலுகை அட்டை, சீருடைகள், காலணிகள் ஆகியவை இலவச வழங்கப்படம்.

அத்துடன்  மாதந்தோறும் ரூ.500 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

மகளிருக்கான தொழிற்பயிற்சி என்னென்ன?

கம்மியர் கருவிகள் , தகவல் தொழிற்நுட்பம், சுருக்கெழுத்து, தையல் வேலை, அலங்கார பூ தையல் தொழிற்நுட்பம்,  கணினி உதவியுடன் கூடிய பூத்தையல்,  நவீன ஆடை வடிவமைத்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

மாணவிகளே உடனே விண்ணப்பியுங்கள்.

இந்த இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.