சென்னை:

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆந்திராவுக்கு சிறப்பு ரெயிலில் பயணம் செய்யும் வகையில், பல எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் நடுவழயில் நிறுத்தியதால், வழக்கமாக பணிகளுக்கு வரும் ரெயில் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

முன்னதாக 2 நாள் பயணமாக சென்னை வந்திருந்த  துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு, இன்று காலை திரிசூலத்தில் இருந்து பிரத்யேகமான சொகுசு ரெயில் மூலம் ஆந்திர மாநிலம் தடா சென்றனர். இதற்காக  6 பெட்டிகள் கொண்ட சொகுசு சிறப்பு ரெயிலை தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்திருந்து. இந்த ரெயில்  இன்று காலை 7.40 மணிக்கு திரிசூலத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

இதன்காரணமாக  தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த அனந்தபுரி, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள் . சுமார் 1 மணி நேரம் 2 ரெயில்களும் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பல எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக வழக்கமாக பணிக்கு வரும் பயணிகளும் கடுமையான அவதியடைந்தனர்.

.பெங்களூரிவிருந்து தனி விமானத்தில் வந்த அவரை  ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். சென்னையில் தங்கும் வெங்கையா நாயுடு சிறப்பு ரெயில் முலம் ஆந்திர மாநிலம் தடா சென்று பின் அங்கிருந்து காரில் சித்தூர் செல்கிறார்.

அங்கு விழாவில் பங்கேற்று விட்டு பின்னர் சென்னை திரும்பும் குடியரசு துணை தலைவர் தனியார் பல்கலைக்கழகம் மற்றும் பள்ளிக்கூட  விழாவில் பங்கேற்கிறார்.

24ந் தேதி காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் வெங்கையா நாயுடு திருப்பதி செல்கிறார். அவரது வருகையையொட்டி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.