சென்னை

வினில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஆவின் நிர்வாகம் தீபாவளி பண்டிகைக்குச் சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு விற்பனை செய்யப்பட்ட ஆவின் இனிப்பு வகைகள் பொது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது நினைவிருக்கலாம்.

அதை போல வரும் தீபாவளி பண்டிகைக்கும் தரமான சிறப்பு இனிப்பு வகைகள் எவ்வித விலை மாற்றமும் இன்றி பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.  அதாவது காஜூ கட்லீ (250 கி) -ரூ.260, நட்ஸ் அல்வா (250 கி) -ரூ.190, மோத்தி பாக் (250 கி) -ரூ.180, காஜு பிஸ்தா ரோல்(250 கி) -ரூ.320, நெய் பாதுஷா (250 கி) -ரூ.190 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.