டெல்லி:
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி கடந்த ஒரு மாதமாக போராடி வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் 5 எம்பிக்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜனிடம் ராஜினாமா கடிதத்தை அவர்களை கொடுத்துள்ளனர்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து வரப்பிரசாத் ராவ், சுப்பாரெட்டி, மிதுன் ரெட்டி, அவினாஷ் ரெட்டி, ராஜ்மோகன் ரெட்டி ஆகிய 5 எம்பிக்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
ஆந்திரப்பிரதேசம்: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, ஒய்எஸ்ஆர் கட்சி, தெலுங்கு தேச கட்சி எம்.பி.க்கள் மக்களவை கடந்த 20 நாட்களாக பாராளுமன்ற அவைகளை முடக்கி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்து, சபாநாயகர் அறைக்கு சென்றனர். அங்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இல்லாததால், அங்கேயே அமர்ந்தும், படுத்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து அறைக்கு வந்த மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் எம்.பி-க்கள் அனைவரும் தங்களின் ராஜினாமா கடிதத்தை வழங்கினர்.
இதனால் பாஜக அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது