டில்லி:

மூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி வரும் 9ந்தேதி நாடு முழுவதும் உண்ணாவிரதம் நடைபெறும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

இந்நிலையில், ஏட்டிக்குப்போட்டியாக, காங்கிரசை கண்டித்து, வரும் 12ந்தேதி உண்ணாவிரதம் இருக்கப்போவ தாக  பாரதிய ஜனதா கட்சி அறிவித்து உள்ளது. பாரதியஜனதா எம்.பி.க்கள் அவர்களின் தொகுதிகளில் உண்ணா விரதம் மேற்கொள்வார்கள் என்று மத்திய அமைச்சர் கூறி உள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, செய்தியளார்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனந்தகுமார் ,

காங்கிரசை கண்டித்து ஏப்ரல் 12ம் தேதி பாஜக எம்.பி.,க்கள் நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக கூறினார்.

பாஜக மக்களை இணைப்பதற்கான வேலையை செய்கிறது, ஆனால் காங்கிரஸ் மக்களை பிரிப்பதற்கான வேலையை செய்கிறது. காங்கிரஸ் பிரிவினைவாத, எதிர்மறையான அரசியல் செய்கிறது என்று குற்றம் சாட்டினார்.

கடந்த 23 நாட்களாக காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடக்கியது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் முடக்கியதை கண்டித்து வரும் 12ம் தேதி பாஜக எம்.பி.,க்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்துவார்கள். பாஜக எம்பிக்கள் ஒவ்வொருவரும்  அவரவர் தொகுதிகளில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.