டில்லி :

ண்ணா பல்கலைக்கழகம் உள்பட  தமிழகத்தை சேர்ந்த 7 கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க யுஜிசி முடிவு செய்துள்ளதாக மனிவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சிறப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ள 60 மத்திய, மாநில, தனியார் கல்வி நிறுவனங்களில் தமிழகத்தை சேர்ந்த 9 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,  சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு மனித வள மேம்பாடு படிப்புக்கள், புதிய ஆராய்ச்சி படிப்புக்கள் உள்ளிட்ட புதிய துறைகள் சார்ந்து படிப்புக்களை துவங்கவும், அவற்றை வெளிநாட்டு தரத்தில் வழங்கவும் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், 5 மத்திய பல்கலை, 21 மாநில பல்கலை, மற்றும் 26 தனியார் பல்கலைகளுக்கு இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பட்டியலில் இடம்பெற்று தமிழகத்தை சேர்ந்த கல்வி நிறுவனங்கள

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
மெட்ராஸ் பல்கலைக்கழகம், சென்னை
ஸ்ரீ ராமச்சந்திர மருத்துவ மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, சென்னை
வெல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, வேலூர், தமிழ்நாடு

ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, காலவக்கம், தமிழ்நாடு
டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, சென்னை
அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி

ஆகியவை இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.