ஜம்மு-காஷ்மீர்
ம்மு காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் பெண்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்ட மருத்துவமனையில் பெண்களுக்காகச் சிறப்பு ‘பிங்க் பூத்’ அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய சுகாதார ஊழியர் ஜோதி தேவி, பெண்களுக்காக பிரத்தியேகமாகத் தடுப்பூசி மையம் ‘பிங்க் பூத்’ நேற்று திறக்கப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுமிகள் தடுப்பூசிக்கு ஒரு சிறப்பு மையமாக இது இருக்கும். இந்த மையத்தில்   தடுப்பூசிக்காக அதிகமான பெண்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள் என்று தெரிவித்தார்.