சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதை வரும் திங்கட்கிழமை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, திறந்த வைக்கிறார்.
கடற்கரை வரை சென்று மாற்று திறனாளிகளும் கடலை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாதை மாற்றுதி திறநாளிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கடைகளை ஒழுங்குபடுத்தி, அழகுபடுத்துவது தொடர்பாக பல ஆண்டுகளாக சென்னை உயர்நீதி மன்றத் தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாத விசாரணையின்போது, மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளி களுக்கான பாதை அமைக்க கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது. அதன்படி சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை ஆக 2 இடங்களில் மாற்றுத்திறனாளி களுக்கு பாதை அமைக்க மத்திய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது.
அதைத்தொடர்ந்து பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. உழைப்பாளர் சிலைக்கு பின்புறம் 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலம், காந்தி சிலை அருகே 125 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்த பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலமானது, கான்கிரீட் அல்லாத மரப்பலகையால் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் 8.8 லட்சம் மதிப்பில் மணல் பரப்பில் இயக்கும் 4 சிறப்பு சக்கர நாற்காலிகள் மாநகராட்சியால் வாங்கப்பட்டுள்ளது.
இந்த நடைபாதையை சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, வரும் திங்கட்கிழமை பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.