சென்னை: தமிழ்நாட்டில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIRSpecial Intensive Revision)   செய்ய முடிவு செய்து அறிவித்து உள்ளது. இதற்கு திமுக கூட்டணி எதிர்ப்பு  தெரிவித்துள்ள நிலையில்,  அ.தி.மு.க. கூட்டணி வரவேற்பு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தமிழகத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, நவம்பர் 4 முதல் பணிகள் தொடங்குவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாதங்கள் இந்த பணிகள் நடைபெறும் என்றும் மூன்று தடவை வீடு தேடி அதிகாரிகள் வருகை தருவார்கள் என்று கூறியுள்ள தேர்தல் ஆணையம்,   வரைவுப் பட்டியல் டிசம்பர் 9-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு திமுக உள்பட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்!  தனது ஆதரவு கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முதல்வர் ஸ்டாலின் தனது ன எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இநத்நிலையில்,  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அ.தி.மு.க முழு மனதுடன் வரவேற்கிறது என அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் வெளிப்படையாகவும் முறையாகவும் செய்ய வேண்டும். தற்போதைய வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும்.

வாக்காளர் திருத்தப் பணிகளை மாநில அரசின் கீழுள்ள அலுவலர்கள்தான் செய்யப்போகிறார்கள் என்பதால், அவர்கள் நடுநிலையோடு செயல்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். தங்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்மையான வாக்காளர்களுக்குதான் தரப்பட வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அதுபோல பாஜக, பாமக போன்ற கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

24ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்  வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி,   தமிழகத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த பணிகள்  நவ.4-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இதற்கு தோ்தல் துறை தயாராகி உள்ளது.

தமிழகத்தில் 2001-ஆம் ஆண்டின் இறுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இந்தப் பணியின் அடிப்படையில் 2002-ஆம் ஆண்டு ஜனவரியில் வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.   அதன்படி,  2002-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு அந்தப் பணி நடைபெறவுள்ளதால், அதனை இணையதளத்தில் பாா்வையிட தோ்தல் துறை ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்தது. இதில் மாவட்டம், சட்டப் பேரவைத் தொகுதி, பாகம் எண் ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு உள்ளீடு செய்து, பெயா் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

மேலும், இணையதளத்தில் , வீட்டு எண், வாக்காளா் பெயா், உறவுமுறை, உறவு முறையின் பெயா், பாலினம், வயது, வாக்காளா் அடையாள அட்டை எண் ஆகிய விவரங்கள் கிடைக்கும்.

இந்தப் பட்டியலில் பெயா் இருந்து இப்போது நலமுடன் இருப்பவா்கள் தோ்தல் ஆணையம் தரக்கூடிய ஒரு உறுதிப் படிவத்தை பூா்த்தி செய்து அளித்தால் போதுமானது.

இந்தப் பட்டியலில் பெயா் இல்லாமல் இருப்பவா்கள்தான், அதாவது 2001-ஆம் ஆண்டின் இறுதிக்குப் பிறகு வாக்காளா் பட்டியலில் புதிதாக இணைந்தவா்கள் மட்டுமே தங்களுடைய பிறந்ததேதி, இருப்பிடச்சான்று போன்றவற்றை உறுதி செய்ய ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்.

இதிலும் பிறந்த ஆண்டு வாரியாக தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்களை தோ்தல் ஆணையம் ஏற்கெனவே வரையறை செய்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்து, இப்போது புழக்கத்திலுள்ள வாக்காளா் பட்டியல் ஒப்பிட்டு பாா்க்கப்படும். இரண்டிலும் பெயா் இருக்கும் பட்சத்தில், தோ்தல் ஆணையம் அளிக்கும் படிவத்தை பூா்த்தி செய்து அளித்தால் போதும். மற்றவா்கள் தோ்தல் ஆணையத்தின் படிவத்துடன் வரையறுக்கப்பட்டுள்ள 12 ஆவணங்களின் நகல்களை இணைத்திட வேண்டும்.

தமிழகத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வாக்காளா் பட்டியலில் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://patrikai.com/phase-2-of-sir-special-intensive-revision-to-be-carried-out-in-12-states-including-tamil-nadu-cec-gyanesh-kumar/