சென்னை
சென்னையில் இயக்கப்படும் மின்சார பேருதுக்ளில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்த விவரங்கள் இதோ

நேற்று சென்னையில் முதல் கட்டமாக 120 மின்சார பேருந்துகளை தமிழக முதல்வர்ர் மு.க.ஸ்டாலின் சென்னை வியாசர்பாடி பணிமனையில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். இந்த மின்சார பேருந்துகளில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
அவை பின் வருமாறு :
* பயணிகள் பாதுகாப்புக்காக ஒரு பின்புற கேமரா உள்பட 7 கேமராக்கள் இடம் பெற்றுள்ளன.
* பயணத்தின்போது ஏதேனும் அசாதரண சூழல் ஏற்பட்டால் ஓட்டுநருக்கு தகவலை சட்டென்று தெரிவிக்கும் வகையில் 13 அவசர கால, அவசர நிறுத்த கோரிக்கை சுவிட்சுகள் (பொத்தான்கள்) வைக்கப்பட்டுள்ளன.
* ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. எனவே பஸ் நிறுத்தம் தொடர்பான தகவல்கள் ஒலி அறிவிப்பு மூலமாகவும், எல்.இ.டி.திரை மூலமாகவும் பயணிகள் அறிந்துகொள்ளும் வசதி உள்ளது.
* மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக 6 இருக்கைகள் இடம் பெற்றுள்ளன. அவர்கள் சிரமமின்றி ஒபேருந்தில் ஏறும் வகையில் மடக்கும் வசதி கொண்ட சாய்வுதள படிக்கட்டும் இடம் பெற்றுள்ளது.
* பேருந்து வேகமாக செல்லும்போது பயணிகள் தடுமாறாமல் இருக்க ‘சீட் பெல்ட்’டுடன் ஒவ்வொரு இருக்கையும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
* தொலைதூர அரசு சொகுசு பேருந்துகள், ‘ஆம்னி’ பேருந்துகளில் இருப்பது போன்று ஒவ்வொரு இருக்கையின் கீழும் செல்போன் ‘சார்ஜிங் பாயிண்ட்’ நிறுவப்பட்டு உள்ளது.
* பேருந்து விபத்தில் சிக்கினால் பயணிகள் உடனடியாக வெளியேறுவதற்கு 2 அவசர கால வழிகள் வைக்கப்பட்டு உள்ளன. மருத்துவ முதலுதவி பெட்டகமும் வைக்கப்பட்டு உள்ளது.
* 2 மணி நேரம் ‘சார்ஜிங்’ செய்தால் இந்த பேருந்து 200 கிலோ மீட்டர் வரை இயங்கும்.
* பேருந்தின் தரை உயரத்தை 400 மில்லி மீட்டரில் 250 மில்லி மீட்டராக குறைக்கும் ‘கீலிங்’ தொழில்நுட்ப வசதி உள்ளது. இது மழைக்காலத்தில் தேங்கிய தண்ணீரில் பபேருந்துசிக்கலின்றி செல்வதற்கு வசதியாக இருக்கும்.
* டீசல் மூலம் இயங்கும் மாநகர பேருந்து ஒரு கிலோ மீட்டருக்கு தோராயமாக 755 கிராம் ‘கார்பன் டை ஆக்சைடை’ வெளியிடும். சுற்றுச்சூழலுக்கு மின்சார பேருந்துகளால் குந்தகம் ஏற்படாது.