சென்னை: 
ழும்பூர் அருங்காட்சியகத்தில் சிறப்புக் கண்காட்சி இன்று துவங்க உள்ளது. 
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ‘இந்திய விடுதலைப் போராட்டம்’ என்ற பெயரில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கலைப் பொருள்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ள  சிறப்புக் கண்காட்சி, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.  தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறைகளின் அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த சிறப்புக் கண்காட்சியினை இன்று காலை தொடங்கி வைக்கிறார்.