சென்னை:

ண்ணா பலைக்ககழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் படித்து, தேர்வில் தோல்வி அடைந்த 15 ஆண்டுகள் வரை உள்ள மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மீண்டும் தேர்வெழுத வாய்ப்பு வழங்குவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.  தற்போது, அந்த சிறப்பு தேர்வுக்கான தேதியை ஒத்தி வைத்துள்ளது.

இநத சிறப்பு தேர்வு மூலம் 2001ம் ஆண்டுக்கு பிறகு பி.இ. முடித்து ஓரிரு பாடங்கள் அரியர் வைத்ததன் காரணமாக பட்டம் பெறாமல் இருக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், மீண்டும் தேர்வு எழுத கடைசி வாய்ப்பு வழங்கப்படும் என்றும்,  இதனால் 30 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.

ஆனால், தற்போது,  சிறப்பு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு நடைபெறும் தேதி  பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள் மற்றும் பணம் செலுத்தியவர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை எனவும் புதிதாக பதிவு செய்த காத்திருப்பவர்களுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]