டெல்லி: இங்கிலாந்து பிரதமராக பதவி ஏற்றுள்ள இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோபிடன் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். மேலும் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். பிரிட்டன் வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரதமராகி உள்ளார்.
பிரிட்டனில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா ஊரடங்கை மீறி பார்ட்டி நடத்தியது தொடங்கி ஊழல் புகார் வரை பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் பதவி விலகிய நிலையில், புதிய அமைச்சராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவரால் பொருளாதாரத்தை உயர்த்த முடியவில்லை. அதனால், 45 நாளில் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், பிரதமர் போட்டி மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், மீண்டும் பிரதமர் போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், நாட்டின் பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கன்சர்வேடிவ் தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து பென்னி மார்டன்ட் விலகியதை அடுத்து ரிஷி சுனக் கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, அவரை பிரதமராக நியமிக்க மன்னர் 3ஆம் சார்லஸ் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, அவருக்கு பிரதமர் பதவி பிரமாணம் நடைபெற்றது. பிரிட்டன் வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரதமராகி உள்ளார்.
42 வயதாகும், பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்க உள்ள ரிஷி சுனக் கடந்த 1980 ஆம் ஆண்டு மே 12ல் பிரிட்டன் சவுதாம்ப்டன் நகரில் பிறந்தார். இவரது தந்தை யாஷ்வீரின் தந்தை வழி தாத்தாவும் பாட்டியும் இந்தியாவின் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் 1960ல் கென்யாவுக்கு குடிபெயர்ந்தனர். இந்த குடும்பத்தில் இருந்து வந்த அவர் தற்போது பிரதமர் ஆகி உள்ளார்.
பிரிட்டன் பிரதமராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில், தனது சிறப்பு தீபாவளி வாழ்த்துக்களை, இங்கிலாந்து வாழ் இந்தியர்களுக்கு தெரிவித்தார். “மிகவும் அன்பான வாழ்த்துக்கள் ரிஷி சுனக்! இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், உலகளாவிய பிரச்சினைகளில் நெருக்கமாக இணைந்து பணியாற்றவும், ரோட் மேப் 2030ஐ செயல்படுத்தவும் நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இரு நாட்டின் இடையே உள்ள வரலாற்று உறவை, நவீன கூட்டாண்மையாக மாற்றும் வகையில், ‘வாழும் பாலமாக’ உள்ள இங்கிலாந்து வாழ் இந்தியர்களுக்கு தீபாவளி சிறப்பு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோபிடன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பிரிட்டன் அதிபராக ரிஷி சுனக் தேர்வானது எல்லை தாண்டிய மைல்கல் என புகழ்ந்துள்ளார். வெள்ளை மாளிகையில் பேசிய அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகி இருப்பது நம்ப முடியாத மைல்ல என கூறியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் உட்பட 200 பேரால் பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகி இருப்பதாக குறிப்பிட்ட பைடன், எல்லைகளை தகர்த்தெறிந்து அவர் சாதித்திருப்பதாக புகழ்ந்தார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “முதலில் கமலா ஹாரிஸ், இப்போது ரிஷி சுனக் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மக்கள் தங்கள் நாடுகளில் பெரும்பான்மை இல்லாத குடிமக்களை அரவணைத்து அரசாங்கத்தில் உயர் பதவிக்கு தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தியாவும் பெரும்பான்மைவாதத்தை கடைப்பிடிக்கும் கட்சிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இதில் இருப்பதாக நான் நினைக்கிறேன்”, என்று தெரிவித்துஉள்ளர்.
டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியர்கள் உலகம் முழுவதும் தங்கள் அடையாளத்தை பதித்துள்ளனர். இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்கும் திரு ரிஷி சுனக் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நாட்டை வெற்றிகரமாக வழிநடத்த அவருக்கு ஞானமும் வலிமையும் கிடைக்க வாழ்த்துகிறேன்”, என்று எழுதியுள்ளார்.