புதுடெல்லி:
ங்கிகளில் 2000 ரூபாய் தாள்களை மாற்ற ரிசர்வ் வங்கியால் பிரத்யேக சலான் வெளியிடப்பட்டுள்ளது.

வங்கிகளில் இன்று முதல் 2,000 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து மாற்றிக்கொள்ள முடியும். வழக்கமான வங்கிப் பணிகளைப் பாதிக்காத வகையில் ஒருவர், நாள் ஒன்றுக்கு 10 நோட்டுக்களை மட்டுமே மாற்றமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதனை மாற்றுவதற்கு ஏதுவாக 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதற்கான தேவை நிறைவடைந்த நிலையில், கடந்த 2018-19-ம் ஆண்டில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி கூறியது.

கடந்த 2018 மார்ச் 31-ம் தேதியன்று, சுமார் 6 லட்சத்து 73 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. அதன் படி, இன்று முதல், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், வங்கிகளில் 2000 ரூபாய் தாள்களை மாற்ற ரிசர்வ் வங்கியால் பிரத்யேக சலான் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த சலானில் வாடிக்கையாளர் பெயர், முகவரி, தொலைபேசி எண் கேட்கப்பட்டுள்ளது