சென்னை: தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்ற பயணிகள்,   ஊர் சென்னை திரும்பும்  நிலையில், அவர்களின் வசதிக்காக நாளை முதல் 3 நாட்கள்   சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மொத்தம் 15ஆயிரம் சிறப்பு பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படுகிறது.

தீபாவளி திருநாளை  முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும். வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில்  இன்று முதல் ( 28.10.2024 ) 30.10.2024 வரையிலான 3 நாட்களுக்கு 15ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டனர். இதன்மூலம் சமார் 13 லட்சம் பேர் வெளியூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

வெளியூர் சென்ற பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு, இன்றுமுதல் மீண்டும் சென்னை திரும்புவர்கள். அதனால், அவர்களின் வசிக்காக  நலாளை (நவம்பர் 2) முதல் 3 நாட்கள் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.

அதன்படி, வெளியூர் செல்லும் பேருந்துகள் கீழ்க்குறிப்பிட்டுள்ள மூன்று இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,   நவம்பர் 2 ந்தேதி  முதல் 4 ஆம் தேதி வரை வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இந்த  3 நாட்களுக்கு மொத்தம் 12,848 பேருந்துகள் பல நகரங்களில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 2,692 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்ப 1.50 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.