சென்னை

ன்று ஆடிக் கிருத்திகை தினத்தை முன்னிட்டு சிறப்புப் பதிவு

பொதுவாக ஆடி மாதங்களில் எந்த மாதங்களிலும் இல்லாத அளவுக்கு சிறப்பு நாட்கள் வருகின்றன.  இவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆடிக் கிருத்திகை ஆகும்.   ஒவ்வொரு கிருத்திகை நட்சத்திரத்தன்றும் விரதம் இருப்பது நன்மை அளிக்கும்.  ஆடிக் கிருத்திகை அன்று விரதம் இருந்தால் அனைத்து துயரங்களும், தோஷங்களும் நீங்கும்.

முருகன் சிவபெருமானின் அருளால் தோன்றி ஆறு கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார் அந்த கார்த்திகை பெண்களைக் கவுரவிக்கும் வகையில் அவர்கள் ஆறு பேரும் “கார்த்திகை” நட்சத்திரமாக மாறி அன்றைய தினத்தில் முருகப்பெருமான் வழிபடப்படும் வழக்கம் ஏற்பட்டது. ஒவ்வொரு  வருடத்திலும் தை கிருத்திகை, ஆடி கிருத்திகை என்ற இரு கிருத்திகைகள் சிறப்பானதாகும்.

ஆடிக் கிருத்திகை தினத்தன்று, கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் இப்படிப்பட்ட பாடல்களை ஒலிக்கச் செய்து உங்களது காதுகளில் கேட்பது புண்ணியத்தைத் தேடித் தரும். திருமணமாகாதவர்களாக இருந்தால், திருப்புகழில் சொல்லப்பட்டிருக்கும் இந்த பாடலை முருகப் பெருமானை நினைத்து, மனமுருகி ஒரே ஒரு முறையாவது உங்களது வாயால் உச்சரிக்க வேண்டும். அப்படிச் செய்தால் அடுத்த கார்த்திகைக்குள் கண்டிப்பாகத் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

ஆடிக் கிருத்திகை தினத்தன்று அதிகாலை வேளையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு, பூஜை அறையைச் சுத்தம் செய்து முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறு கோண கோலம் இட வேண்டும். முருகனின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபமேற்றி, பூக்கள் மற்றும் பழங்களை நிவேதனம் வைத்து உணவு மற்றும் நீரேதும் அருந்தாமல் கந்த சஷ்டி கவசம் அல்லது சண்முக கவசத்தை மனமொன்றி படிக்க வேண்டும்.

இந்த தினம் முழுவதும் உணவேதும் உண்ணாமல் வெறும் நீரை மட்டும் அருந்தி விரதம் இருப்பது சிறந்தது. உணவு அவசியம் சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இந்நாள் முழுவதும் உப்பு சேர்க்கப்படாத உணவை உண்டு மாலையில் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இதனால் தீராத கஷ்டங்கள் தீர்ந்து நல்வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.