சென்னை: “சென்னை அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள எஞ்சிய குடியிருப்புகளை இடிக்க வேண்டாம்” என தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறையினருக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்திது உள்ளது.

சிங்காரச்சென்னையின் சீர்மிகு திட்டத்தின் ஒரு பகுதியாகவும், நீர்நிலைகள் மற்றும் தண்ணீர் செல்லும் கால்வாய்களை ஆக்கிரமித்து குடிசை போட்டு வசிப்பவர்களை அகற்றும் வகையிலும் சென்னையின் பல பகுதிகளில் ஆகிரமிப்பு அகற்றப்பட்டு வருகின்றன.

அதன்படி, அரும்பாக்கம் பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு பணிகள் அகற்றும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. அங்குள்ள பங்கிங்காம் கால்வாயின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதை அகற்றும் பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர்.சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகpரில் மொத்தம் 270 வீடுகள் உள்ளநிலையில் இதில் 240 வீடுகளை அகற்றும்பணி தொடங்கியது.  இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

25 வருடமாக வாழ்ந்து வந்த பூர்வகுடிகளை ஒட்டுமொத்தமாக வெளியேற்றும் போக்கை வன்மையாக கண்டிப்போம் என அவர்களுக்கு ஆதரவாக சில அமைப்புகளும் களமிறங்கின. இந்த பிரச்சினை பெரிதான நிலையில், அங்குள்ள மக்களை அகற்ற வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரையில், அவர்களை அப்புறப்படுத்த வேண்டாம் என சென்னை மாநகராட்சி பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தி உள்ளது.