அருவெறுப்பாக பேசிய விவேக், ஆலோசகரா? : சினிமா செய்தியாளர்கள் கொதிப்பு

Must read

விதா என்ற சினிமா செய்தியாளர் தலைமையில் இயங்கும் “சினமா செய்தியாளர் சங்கத்துக்கு விவேக் ஆலோசகராக பொறுப்பேற்றுள்ளார்.

இது சினிமா செய்தியாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் கூறுவதாவது:

“சில ஆண்டுகளுக்கு முன், பிரபல நடிகை (பூனைக்கண்) புவனேஸ்வரி, விபசார வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் நடிகைகள் மஞ்சுளா, ஸ்ரீபிரியா, சீதா உள்ளிட்ட சில பிரபல நடிகைகளும் விபசாரத்தில் ஈடுபடுவதாகவும் அவர்களுக்கான தொகையையும் புவனேஸ்வரி  தெரிவித்ததாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

இதை கண்டித்து  தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கூட்டம் நடந்தது. அங்கு பேசியவர்களில், நடிகர்கள் சத்யராஜ், சூர்யா, விவேக், ஸ்ரீபிரியா, ஆர்.கே. செல்வமணி ஆகியோர் சினிமா செய்தியாளர்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தார்கள்.

விவேக்

இவர்களில், காமெடி நடிகர் விவேக். மிக ஆபாசமாக பேசினார்.

“எனக்கு கோபத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அந்த செய்தியை நினைத்தால் உடம்பு கொதிக்கிறது. எவன்டா அவன் எங்களைப் பத்தி தப்பா எழுதறவன்… டேய்… எங்களைப் பத்தியா மேட்டர் போடுறீங்க… இப்ப நான் போடறேன் மேட்டர்… உங்க ஆயா, அம்மா, மனைவி, அக்கா – தங்கச்சிகளை அனுப்புங்கடா… அவங்களை மார்ப்பிங்ல (Morphing) ஜட்டியோட நான் மாத்தி தர்றேன்… அதைப் போடு உன் பத்திரிகையில!

இனி எனக்கு எந்த பத்திரிகைக்காரன் தயவும் தேவையில்லை. அதிலும் இந்த …பய தினமலர் வேண்டவே வேண்டாம்….” என்று விவேக் பேசினார்.

இதனால் சினிமா செய்தியாளர்கள், விவேக்கின் ப்ரஸ்மீட்களை  சில காலத்துக்கு புறக்கணித்தனர்.

இந்த நிலையில்,  சினிமா செய்தியாளர் சங்கம் ஒன்றுக்கு விவேக்கை ஆலோசகராக நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விசயம்” என்று அந்த சினிமா செய்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

கவிதா

இது குறித்து குறிப்பிட்ட சங்கத்தின் தலைவரான கவிதாவை தொடர்புகொண்டு கேட்டபோது, “. சங்கத்தை அனைவருக்கும் பயனுள்ள வகையில நடத்த, சினிமாவின் பல துறைகளைச் சேர்ந்தவர்களின் ஆதரவும் தேவை. அந்த வகையில் விவேக், ஆலோசகராக பொறுப்பேற்கிறார். விரைவில் பிரபல இயக்குநர் ஒருவரும், இசையமைப்பாளர் ஒருவரும் ஆலோசகராக பொறுப்பேற்க இருக்கிறார்கள்.

விவேக் பல சமுதாய சேவைகளை செய்துவருகிறார். ஆகவே அவரது ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கும். தவிர ஆலோசகர் என்பதால் முழுமையாக விவேக் சொல்வதுபோல் சங்கத்தை நடத்தப்போவதில்லை என்பதையும் சினிமா செய்தியாள சகோதர, சகோதரிகள் உணர வேண்டும்” என்றார்.

More articles

Latest article