சென்னை,

மிழக அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஏற்கனவே தடை விதித்துள்ள சென்னை ஐகோர்ட்டு, இன்றைய விசாரணையை தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சபாநாயகர் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள நீதிபதி, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 18 தொகுதிகளும் காலி என அறிவிக்க தடை விதிப்பதாகவும் கூறி உள்ளார்.

காலியாக அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தவும் தடை விதித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து விளக்கம் அளிக்க சபாநாயகர், கொறடா, முதல்வருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

மேலும் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை அக்டோபர் 4ந்தேதிக்கு தள்ளி வைப்பதாகவும் கூறி உள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். மேலும், அவர்களின் 18 தொகுதிகளும் காலி என அரசிதழிலும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.