நாசா: சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து மூன்று விஞ்ஞானிகள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்.
நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு விஞ்ஞானிகள் செல்வதும், ஆய்வு முடித்து அவர்கள் நாடு திரும்புவதும் வழக்கமான ஒன்று. இன்று மூன்று விஞ்ஞானிகள் ரஷ்யாவின் சோயூஸ் டிஎம்ஏ என்ற விண்கலம் மூலம் கஜகஸ்தான் வந்து சேர்ந்தார்கள்.
இந்த விண்கலம் அதீத வேகத்தில் 3 மணி நேரத்தில் இறங்கு தளத்திற்கு வந்து சேர்ந்தது. இந்த வீரர்கள் விண்வெளி மையத்தில் 186 நாட்கள் தங்கி இருந்தனர்.
மூவரில் ஒருவரான பிரிட்டன் விஞ்ஞானி தீம் பீக்,” இந்த இனிய பயணத்தை நான் என்றும் மறக்க முடியாது. இது போன்ற ஒரு சிறப்பான பயணத்தை நான் இனி என் வாழ்நாளில் இனி எப்போதும் பெற முடியாது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.