தூத்துக்குடி: இன்று நடைபெற்ற தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.32,000 கோடிக்கு மதிப்பிலான 41 ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத் தானது. மேலும் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.2,530 கோடி முதலீட்டில் 5 திட்டங்களையும் தொடங்கி வைத்தார். அப்போது தூத்துக்குடியில் 250 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி பூங்கா உள்பட 4 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற நிலையில், அங்கு வின்பாஸ்ட் மின்சார கார் நிறுவனத்தை திறந்து வைத்ததுடன், அங்கு தயாரிக்கப்பட்ட முதல் காரில் தனது கையெழுத்தை போட்டு, விற்பனையை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். அங்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், பல்வேறு நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, ரூ.32,000 கோடிக்கு 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் காரணமாக, 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், சொன்னதை செய்வோம் என்பது தான் திமுக அரசின் குறிக்கோள் என்று கூறியவர், தூத்துக்குடி மாவட்டத்தில் 250 ஏக்கரில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் ஏன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விண்வெளித்துறைக்கு தேவையான கருவிகளின் உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஊக்குவிக்கும். கப்பல்கட்டும் துறையை மேம்படுத்த பிரத்யேக நிறுவனம் வெகுவிரைவில் தொடங்கப்படும்.
முருங்கை ஏற்றுமதி, சாகுபடி கட்டமைப்புக்காக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ரூ.5.59 கோடியில் புதுவசதி மையம் ஏற்படுத்தப்படும். நெல்லையில் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மையம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
தென் கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் கப்பல்களுக்கு நுழைவு வாயிலாக தூத்துக்குடி உள்ளது என்றார். வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் கொண்டு வந்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குவிக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியை தொழிற்வளர்ச்சி மிக்க மாவட்டமாக வளர்த்து எடுக்கிறார். சொன்னதை செய்வோம் என்பதுதான் நமது அரசின் குறிக்கோள் என தெரிவித்ததுடன், முaynes Circuit india நிறுவனம். தேனி மாவட்டத்தில் ரூ.1,500 கோடி முதலீட்டில் சூரிய சக்தி மின் தகடு உற்பத்தி செய்யும் ஆலை அமைகிறது. டெல்லியைச் சேர்ந்த மோபியஸ் எனர்ஜி நிறுவனம் ரூ.1,500 கோடியில் ஆலையை அமைக்கிறது என்றவர், 2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்றுவோம் என உறுதி அளித்தார்.