சென்னை:

டந்த 2017ம் ஆண்டே வடசென்னையின் முக்கியமான பாலமான யானைக்கவுனி மேம்பாலம் சேதம் காரணமாக மூடப்பட்ட நிலையில், 2ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இடிக்கும்பணி தொடங்கி உள்ளது. இதனால், பேசின் பிரிட்ஜ் பாலம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வடசென்னையின் முக்கிய மற்றும் முகப்பு பகுதியான, சென்னை சென்ட்ரல் பின்புறம், வால்டாக்ஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை மற்றும் கண்ணப்பர் திடலை இணைக்கும் முக்கிய பாலமான யானைக்கவுனி பாலம் கட்டப்பட்டு 75ஆண்டுகளுக்கும் மேலானபடியால், கடுமையாக சேதம் அடைந்தது.

இதனால், கடந்த 2017ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தது. இந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டுவது தொடர்பாக மத்திய ரயில்வே துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

2 ஆண்டுகளை கடந்த நிலையில், தற்போது அங்கு புதிய மேம்பாலம் கட்டுவதற்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,, தண்டவாளங்களுக்கு மேல்புறம் ரயில்வே நிர்வாகமும் இருபக்க சாய்வு தள சாலைகளை மாநகராட்சியும் நிர்வாகமும்  அமைக்க உள்ளது.

இந்த நிலையில், பழைய பாலத்தை இடிக்கும் பணி தொடங்கி உள்ளது. இதனால், அந்த பாலத்தில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. முதற் கட்டமாக உயர் மின்னழுத்த கேபிள்களை மாற்றும் பணி களை மின் துறை மேற் கொண்டு வருகிறது. அதைத் தொடர்ந்து பாலத்தை இடிக் கும் பணிகள் மேற்கொள்ளப் பட உள்ளன.

இதுகுறித்து கூறிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள், யானைகவுனி பாலம் தற்போது 50 மீட் டர் நீளத்தில் உள்ளது. அதை இடித்துவிட்டு 150 மீட்டர் நீளத் தில் ரயில்வே நிர்வாகம் சார்பில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. அப்பணிகள் ஜனவரியில் தொடங்க இருப்ப தாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாலம் அமைக்கும் பணிகள் நிறை வடைந்த நிலையில், மாநக ராட்சி சார்பில் ரூ.26 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் பாலத் தின் மேற்கு புறம் 250 மீ, கிழக்கு புறம் 180 மீட்டர் சாய்வுதள சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள் ளப்படும். மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும்  என்று தெரிவித்து உள்ளனர்.

யானைக்கவுனி பாலம் மூடப்பட்டதைத் தொடர்ந்து. வால்டாக்ஸ் சாலை, பேசின்பாலச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. பேசின்பிரிட்ஜ் பாலத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எனவே யானைக்கவுனி பாலப்பணிகளை ரெயில்வே நிர்வாகம் விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.