சென்னை

தெற்கு ரயில்வே இரண்டு வாராந்திர சிறப்பு ரயில்கள் சேவையை நீட்டித்துள்ளது.

இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

”திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (06030) வரும் 7 ஆம் தேதி முதல் மே மாதம் 26 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்கும். மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (06029) வரும் 8 ஆம்தேதி முதல் மே மாதம் 27 ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் வாரத்தில் திங்கட்கிழமை மட்டும் இயங்கும்.

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயிலும் (வண்டி எண்.06067), மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூர் வரும் வாராந்திர வந்தே பாரத் சிறப்பு ரயிலும் (06068) இன்று (வியாழக்கிழமை) முதல் 25 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் வாரத்தில் வியாழக்கிழமை மட்டும் இயங்கும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.