சென்னை:

ண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 60நாட்கள் தொடர்ந்து திறந்திருக்கும் நிலையில், தெற்கு ரயில்வே 44 சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது.

சபரிமலைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதியை முன்னிட்டு,  டிசம்பர் 1ந்தேதி முதல் ஜனவரி 27-ஆம் தேதி வரை 44 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவில் கார்த்திகை மாத பூஜையை முன்னிட்டு கடந்த 16ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதற்கிடையில், உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை காரணம் காட்டி பல  பெண்களும் கோவிலுக்கு செல்ல முயற்சி செய்வதால், பரபரப்பு நிலவி வருகிறது.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக சென்னை தெற்கு ரயில்வே  சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய இரு மார்க்கங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஜனவரி 27ஆம் தேதி வரை 44 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் விவரம்:

 டிசம்பர் 1, 8 ,15, 29 மற்றும் ஜனவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4. 15 மணிக்கு கிளம்புகிறது. மறுநாள் காலை கொல்லத்தில் காலை 10.10 மணிக்கு சென்றடையும்.

டிசம்பர் 2, 9, 16, 23, 30 மற்றும் ஜனவரி 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் கொல்லத்தில் இருந்து கிளம்பி மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை வந்தடைகிறது.

திருவனந்தபுரம் மார்க்கமாக செல்லும் சிறப்பு ரயில், டிசம்பர் 5, 12, 19, 26 மற்றும் ஜனவரி 2, 9, 16 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 11. 45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

மேலும் திருவனந்தபுரத்தில் இருந்து டிசம்பர் 4, 11, 18, 25 மற்றும் ஜனவரி 8, 15 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.45 மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 9 .45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த தகவலை தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.