சென்னை: தசரா பண்டிகை, ஆயுதபூஜை விடுமுறைகளுக்கு சொந்த ஊர் சென்றவர்கள்,. சென்னை திரும்ப நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் குறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி, நாளை  மதுரை, நெல்லை இருந்து தாம்பரம் செல்ல நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர் விடுமுறையையொட்டி கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் மதுரை மற்றும் நெல்லையில் இருந்து சென்னைக்கு நாளை முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு:-

சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 11.45 க்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில், விழுப்புரம், பண்ருட்டி, சிதம்பரம், சீர்காழி, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், வழியாக நாளை காலை 10.15க்கு மதுரையை சென்றடைகிறது.

இதே ரயில் மறுமார்க்கமாக  மதுரையில் நாளை (ஞாயிறு)  இரவு 7 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு ம திங்கட்கிழமை காலை 6 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

நெல்லையில் இருந்து நாளை (ஞாயிறு) மாலை 4.50க்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயிலானது விருதுநகர், திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக, திங்கட்கிழமை அதிகாலை 3 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.

இதனிடையே ஆயுதபூஜை விடுமுறையை முடித்துக்கொண்டு திங்கட்கிழமை சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக காட்டாங்களத்தூர் – தாம்பரம் இடையே 6 புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.