சென்னை
வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறுவதால் இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
வடகிழக்கு பருவ மழை ஜனவரியில் முடிவடைந்ததை ஒட்டி பிப்ரவரி இறுதியில் இருந்தே கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தலை நகர் சென்னையில் வெயில் 100 டிகிரியை நெருங்கி வருகிறது. சேலத்தின் வெயில் ஏற்கனவே ஒரு முறை 100 டிகிரி ஆகிவிட்டது. இதனிடையே நாடெங்கும் இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேற்று முன்தினம் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதன் அருகில் உள்ள இலங்கைப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. நேற்று இது வலுவடைந்துள்ளது. இது மேலும் வலுவடைந்து இன்னும் 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த மண்டலமாக மாறும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் தென் தமிழக க்டலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.