துரை

ரும் 15ஆம் தேதி மதுரை மேலூரில் நடைபெற உள்ள விழாவில் தனது புதுக் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என தினகரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக ஓபிஎஸ் – சசிகலா என இரு அணியாக பிரிந்தது.   அப்போது இரு அணிகளுக்கும் தனித்தனி பெயர்கள் அளிக்கப்பட்டன.  அதன் பின் சசிகலா அணியில் இருந்த எடப்பாடி கோஷ்டியும் ஒபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்தன.   அதன் பின் தேர்தல் ஆணையம் அந்த இணைந்த அணியை அதிமுக என அறிவித்து இரட்டை இலை சின்னத்தை அளித்தது.

சசிகலா அணியில் இருந்த தினகரன் ஆர் கே நகர் இடை தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.   அதன் பின் தனக்கு குக்கர் சின்னத்தையும் முன்பு அளிக்கப்பட்ட அதிமுக அம்மா என்னும் பெயரையும் அடுத்து வரும் தேர்தலில் உபயோகிக்க அனுமதி கோரி தினகரன் வழக்கு தொடர்ந்தார்.   அந்த வழக்கில் தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கவும்,  அவர் பரிந்துரைத்துள்ள மூன்று பெயர்களில் ஒன்றை தேர்தல் ஆணையம் அவர் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

டிடிவி தினகரன் வரும் 15ஆம் தேதி அன்று மதுரை மேலூரில் நடைபெற உள்ள விழாவில் தனது கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் கொடியை அறிமுகப்படுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.    அவர் தனது புதிய கட்சிக்காக அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம்,  எம் ஜி ஆர் அம்மா முன்னேற்றக் கழகம் மற்றும் அம்மா எம் ஜிஆர் முன்னேற்ற் கழகம் என மூன்று பெயரை தேர்ந்தெடுத்துள்ளார்.  அதில் ஒன்றை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.