டிகர் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இப் படத்தை அமேசான் பிரைம் தளத்துக்கு ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய விற்பனை செய்தார் சூர்யா. வரும் அக்டோபர் 30ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

இப்பட விற்பனையிலிருந்து ரூ 5 கோடி சினிமா துறை மற்றும் மாணவ, மாணவி யர்கள், கொரோனா தொற்றில் தன்னலம் பாராமல் பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்களுக்கு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்பட ஒன்றரை கோடி ரூபாய் திரையுலக சங்கங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இன்று அடுத்த தவணையாக மற்றொரு கோடி பிரித்தளிப்பது பற்றி அறிவித்தார்.


தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிதியை சூர்யா சார்பில் சிவகுமார் அளித்த்திருந்தார் . இதுகுறித்து நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சூர்யா சிவகுமார் அவர்கள் தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்ட ளைக்கு இருபது லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். முதலில், அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளை சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக தொழிலை இழந்து நிற்கும் இன்றைய சூழலில் நாடக மற்றும் மூத்த திரைப்பட நடிகர் நடிகைகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சூர்யா அவர்கள் வழங்கியுள்ள இந்த இருபது லட்ச ரூபாய் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக உள்ள இரண்டாயிரம் நபர்களுக்கு விரைவில் பிரித்து வழங்கப்படும்.
இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளை அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.